நிறைவேறாமல் போன விவேக்கின் 'அந்த' ஆசை

 கமலுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற விவேக்கின் ஆசை நிறைவேறுவதற்குள் அவர் சென்றுவிட்டார்.அஜித், விஜய், மாதவன், ரஜினிகாந்த் என்று பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் விவேக். ஏன் பல இளம் ஹீரோக்களுக்கு கூட நண்பராக நடித்து நம்மை எல்லாம் சிரிகக் வைத்திருக்கிறார். ஆனால் அவர் கமல் ஹாசனுடன் மட்டும் சேர்ந்து நடித்ததே இல்லை. கமலுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் விவேக். இந்நிலையில் தான் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கமலுடன் சேர்ந்து நடிக்கப் போகிறேன், என் நீண்ட கால ஆசை நிறைவேறப் போகிறது என்று சந்தோஷமாக ட்வீட் செய்தார் விவேக். ஆனால் அவரின் ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு இறந்துவிட்டார் விவேக். இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இதுவரை மீண்டும் துவங்கப்படவில்லை. ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் ஷங்கர். அந்த தகவல் அறிந்த பலரும் அந்நியன் படத்தை பார்த்து வருகிறார்கள். அதில் ரயிலில் செல்லும்போது சதாவிடம் காதலை சொல்லிவிட்டு முடிந்தால் பசக்குனு ஒரு முத்தம் கொடுக்குமாறு விக்ரமிடம் கூறுவார் விவேக். அதை கேட்டு விக்ரம் பதற, இதுக்குனு கமல் சாரையா கூட்டிட்டு வர முடியும் என்று கேட்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு எக்மோ சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தகவல் வெளியானதுமே ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். எக்மோ சிகிச்சை என்றால் கஷ்டமாச்சே என்று ரசிகர்கள் கலங்கிய நேரத்தில் தான் விவேக் இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகி அவர்களை துயரத்தில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களில் பலரும் விவேக் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

விவேக்கின் மறைவு குறித்து கமல் ட்வீட் செய்திருப்பதாவது, நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றார்.


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post